நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திறந்து வைத்த முதல்வர்
தர்மபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம், அறிவுசார் மையத்தினை வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தர்மபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம், அறிவுசார் மையத்தினை வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தர்மபுரி ஜன் 5: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் தர்மபுரி நகராட்சி, சந்தைப்பேட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சியின் வாயிலாக இன்று ( திறந்து வைத்ததை தொடர்ந்து, இந்நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தர்மபுரி நகர்மன்ற தலைவர் மா.இலட்சுமி, நகர்மன்ற துணைத்தலைவர் அ.நித்யா, நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் வட்டாட்சியர் ஜெயசெல்வம், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story