"மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு !

முதல்வர் திட்ட முகாமில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும்,நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், நாச்சிப்பட்டி ஊராட்சி, கிராம சேவை மையம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபத்தில் (16.7.2024) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும்,நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாநிலங்களவை உறுப்பினரும்,நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்கள். குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட தமிழ்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற நிறைவேற்றி வருகின்றார். நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். போதமலைக்கு ரூ.140.00 கோடியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகைளில் சுமார் ரூ.854 கோடி மதிப்பீட்டில் மாபெரும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்கள். வரும் பொங்கல் பண்டிகைக்குள் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்று 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட சுகாதரமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடு கட்டித்தரப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி வருகிறோம். மகளிர் மேம்பாட்டிற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனை தள்ளுபடி செய்ததோடு மீண்டும் அதிக அளவில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சங்க விவசாயிகளின் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செயததோடு, கடந்த காலங்களில் இல்லாத அளவில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48 போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்ப் புதல்வன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் தொடங்கி வைத்தார். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. நகரப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து, அதனை தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்திட திட்டமிட்டு, 11-7-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 4.7.2024 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2024 அன்று தருமபுரியில் தொடங்கி வைத்தார்கள்.

ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்றையதினம் நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், நாச்சிப்பட்டியில் மின்னக்கல், பொன்பரப்பிப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், நாச்சிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மதியம்பட்டி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துத்திக்குளத்தில், பெரியகுளம், பொம்மசமுத்திரம், வாழவந்திக்கோம்பை, துத்திக்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. மேலும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அகரம் (பழைய கட்டடம்), கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சோழசிராமணி, படைவேட்டியம்மன் கோவில் அம்மன் திருமண மண்டபம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், செங்கப்பள்ளி புகழி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, அந்தந்த ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி நபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

மேலும், முகாம்களில் கலந்து கொள்பவர்கள் தங்களது கோரிக்கைகளை தீர்வு செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடன் கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும்,நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சி.மணிமலா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சு.வடிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ப.கவிதா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story