மின் கம்பங்களை மாற்ற கோரி கோரிக்கை மனு வழங்கிய நகர மன்ற தலைவர்

மின் கம்பங்களை மாற்ற கோரி கோரிக்கை மனு வழங்கிய நகர மன்ற தலைவர்

கோரிக்கை மனு

பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த,மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என மின்சார துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிளிடம், பள்ளிளையம் நகர மன்ற தலைவர் கோரிக்கை மனு வழங்கினார் ..
பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 21 வார்டுகளிலும் நீண்ட காலங்களுக்கு முன்பு மின்சார வாரியத்தினரால் அமைக்கப்பட்டு தற்போது 48 இடங்களில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து, அடிப்பகுதி மிகவும் சேதம் அடைந்து பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர், நாமக்கல் மாவட்ட மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்த நகர மன்ற தலைவர் பள்ளிபாளையம் மோ.செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் ப‌.பாலமுருகன் ஆகியோர் மனுவை வழங்கினர்.

Tags

Next Story