இரூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

இரூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


இரூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டார்.


இரூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், இரூர் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி - ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் இரூர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைசேர்த்திட வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும். அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும்.

இரூர் ஊராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் முறையாக வழங்க வேண்டும், என்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சரி செய்ய வேண்டும் என்றும் சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரூர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்வேன். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர்கள் சரவணன் ஆலத்தூர் சத்தியமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story