பேச்சிப்பாறையில் மாணவியர்களுடன் இரவு உணவு சாப்பிட்ட கலெக்டர்

தமிழ்நாடு அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் துறை அலுவலர்கள் தனித்தனியாக கடந்த 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதில் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தங்கி பயின்று வரும் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடி, அவர்களுடன் இரவு உணவு அருந்தியது பழங்குடியின மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் பழங்குடியின மாணவியர்கள் மேற்படிப்பு மேற்கொள்வதற்கான அறிவுரைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், திருவட்டார் வட்டாட்சியர் புரந்தரதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
