மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

X
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதையொட்டி,தமிழகத்திலும் பல்வேறு கலை, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் மாற்றுத்திறனாளிகள் சம்மந்தமான கணக்கெடுக்கபடுவதையும், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள் சம்மந்தமான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் தொடங்கிவைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு சம்மந்தமான நாட்டுபுற கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த கலை நிகழ்சியை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர் இறுதியாக மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.மேலும், இந்த நிகழ்வின்போதுமாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் பிரமநாயகம், உடனிருந்தார்
Next Story
