வாக்குசீட்டு விநியோகத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

வாக்குசீட்டு விநியோகத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

வாக்கு சீட்டு விநியோகம் 

வேதாரண்யம் அருகே கள்ளிமேடு ஊராட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வாக்காளர் தகவல் சீட்டினை வாக்காளர்களுக்கு வழங்கினார்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அதிகாரபூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 29,நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று தடைபெற உள்ளது. 29.நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் 163.நாகப்பட்டினம். 164.கீழ்வேளூர் (தனி) 165.வேதாரண்யம் ஆகிய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளும், 166. திருத்துறைப்பூண்டி (தனி). 168.திருவாரூர் மற்றும் 169.நன்னிலம் ஆகிய தொகுதிகள் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளும் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 91,056 ஆண் வாக்காளர்களும், 96,841 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும், கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 85,098 ஆண் வாக்காளர்களும். 87,975 பெண் வாக்காளர்களும் 3 மூன்றாம் பாலினத்தவர்களும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 93,777 ஆண் வாக்காளர்களும் 97,500 பெண் வாக்காளர்களும், ஆக மொத்தம் 5,52,272வாக்காளர்கள் உள்ளனர்.

இன்றைய தினம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு ஊராட்சியில் வாக்காளர் தகவல் சீட்டினை வாக்காளர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு இன்று முதல் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச் சாவடிகளும் கீழ்வேளுர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 203 வாக்குச்சாவடிகளும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 227 வாக்குச் சாவடிகளும், ஆக மொத்தம் 653 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வேதாரண்யம் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமாள், வேதாரணியம் வட்டாட்சியர் திலகா மற்றும் வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story