கொடிநாள் நிதிக்கு நன்கொடை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு கொடிநாள் 2022-ம் ஆண்டிற்கு ரூ.2 கோடியே 51 இலட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் இலக்கினை விட அதிமாக ரூ. 2 கோடியே 67 லட்சத்து 25 ஆயிரம் கூடுதலாகவே வசூல் செய்து வழங்கப்பட்டது. இத்தொகையானது 106.47% ஆகும். மேலும் கொடிநாள் தேநீர் விருந்தின்போது கொடிநாள் 2021-ம் ஆண்டிற்காக ரூ.3,00,000/- மற்றும் அதற்கு மேல் வசூல் புரிந்த 18 மாவட்ட அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, ஆண்டுதோறும் நாடெங்கிலும் டிசம்பர் திங்கள் ஏழாம் நாள் முப்படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. நாடுகாத்த படைவீரர்களை நினைவு கொள்ளும் வண்ணம் இத்தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு நாடு காக்கும் நமது முப்படையினரை நினைவு கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டில் முன்னாள் படைவீரர்களை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களை அழைத்து தேநீர் விருந்து அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கும் நாம் அனைவரும் ஒருங்கே சேர்ந்திருப்பது குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கொடிநாளுக்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்திற்கு கொடிநாள் 2022-ம் ஆண்டிற்கு ரூ.2 கோடியே 51 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் இலக்கினை விட அதிமாக ரூ. 2 கோடியே 67 லட்சத்து 25 ஆயிரம் கூடுதலாகவே வசூல் செய்து வழங்கப்பட்டது. இத்தொகையானது 106.47% ஆகும். இச்சீரிய பணியில் ஈடுபட்டு சிறப்புற பணியாற்றிய அனைத்து துறை அலுவலர்களையும் பாராட்டுவதோடு எனது நன்றியினையும் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம் போல் இந்த ஆண்டும் அதிகமாக வசூல் செய்திட அனைத்து துறை அலுவலர்களையும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். இக்கொடிநாள் மூலம் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது.
முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கி, கொடி நாள் வசூலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எம்.சிவக்குமார், உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் எம்.விஜயகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.