கொடி அணிவகுப்பை துவக்கி வைத்த ஆட்சியர்

மக்களவை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியர் பேருந்தில் ஏறி பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்து பேரணியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தேனி புதிய பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொது மக்களிடம் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜீவனா பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தேனி பழனிசெட்டிபட்டியில் தேர்தல் விழிப்புணர்வை முன்னிட்டு காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஏ.ஆர் காவல் துறையினர், மற்றும் காவல்துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்வி ஷஜீவனா தொடங்கி வைத்து அவர்களுடன் பேரணியாக சென்றார். இந்த நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story