தளவாய்பாளையத்த்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

தளவாய்பாளையத்த்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

ஆட்சியர் ஆய்வு

தளவாய்பாளையத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தளவாய்பாளையம்- வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் தங்கவேல். கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்து முடிந்த கரூர் நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான கரூரை அடுத்து தளவாய் பாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில், மூன்றடுக்கு பாதுகாப்புடன் அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் இன்று வாக்கு மையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார். கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக தேர்தல் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story