சாலை பணிகளை ஆய்வு செய்தார் ஆட்சியர்

சாலை பணிகளை ஆய்வு செய்தார் ஆட்சியர்

சாலை பணிகளை ஆய்வு செய்தார் ஆட்சியர்

ரூ.4.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரம் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒகளுர் முதல் மண்டபம் வரை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒகளுர் முதல் மண்டபம் வரை 3.40 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.4.40கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்தறையின் சார்பில் சாலை அமைக்கப்பட்டு, தற்போது சாலையின் இரண்டு புறங்களும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலையில் உள்ள நான்கு தரைப்பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகிலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களிலும் தொடர் மழையினாலும், சாலை அமைக்கப்பட்டவுடனேயே கனரக வாகனங்கள் சென்றதினாலும் ஏற்பட்டுள்ள சிறு சிறு விரிசல்களை முறையாக சரிசெய்ய வேண்டும் என்றும், சாலையின் இரண்டு புறங்களையும் பலப்படுத்தும் வகையில், மண் அணைத்து ஜே.சி.பி.ரோலர் இயந்திர வாகனத்தை கொண்டு சமப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கலைவாணி, உதவி கோட்டப்பொறியாளர் தமிழ்அமுதன், உதவி செயற்பொறியாளர் ராஜ்மோகன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story