வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த கலெக்டர்

 விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தொடர்புடைய விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தால் இறுதியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு கிடங்கை திறந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை பின்பற்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியே எடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சி.பழனி மேற்பார்வையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 1,730 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), 1,730 கட்டுப்பாட்டு கரு விகள் (கண்ட்ரோல் யூனிட்) மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என் பதை உறுதி செய்யும் விவிபேட் கருவிகள் 1,769 என மொத்தம் 5,229 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்கேன் செய்யும் பணி கள் நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் சி.பழனி பார்வையிட்டார். அப்போது தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கணேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story