சேதுக்குவாய்த்தான் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

சேதுக்குவாய்த்தான் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை,

ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தகன மேடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (18.05.2024) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கட்டுமானப் பணிகளை தரமாகவும்,

விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஆழ்வார்திருநகரி) பாக்கியம் லீலா, சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story