மழை பாதிப்பு - ஆட்சியர் நேரடி ஆய்வு

மழை பாதிப்பு - ஆட்சியர் நேரடி ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் கமுதி பகுதிகளில் சேதமடைந்த பயிர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. கமுதி, பெருநாழி, பாப்பி ரெட்டியாபட்டி, பொந்த மொழி, காடமங்கலம், முஷ்ட குறிச்சி, ராமசாமிபட்டி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்பட்டு உள்ளனர். விளைநிலங்களிலும் மழைநீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தன. பெருநாழி அருகே உள்ள குமாரபுரம் ஓடை உடைப்பு ஏற்பட்டு பெருநாழி நேதாஜி பஜாரில் வெள்ளநீர் புகுந்து வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இடை யன்குளம் ஊராட்சியைச் சார்ந்த தாதாகுளம் லட்சுமணன் என்பவரின் வீடு மழையினால் இடிந்து விழுந்தது. வடகிழக்கு பருவமழையால் பாதித்த பயிர் சேதங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டார். விவசாயிகளிடம் பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார். சேதமடைந்த பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பொந்தம்புளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் கலெக்டரிடம் மனு கொடுத்தார். மேலும் பாதிப்படைந்த பகுதிகளில் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, துணை இயக்குனர்கள் பாஸ்கர மணியன், குமார், கமுதி தாசில்தார் சேதுராமன், யூனியன் தலைவர் தமிழ்செல்வி போஸ், தி.மு.க. ஒன்றிய தெற்கு செயலாளர் மனோகரன், யூனியன் ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டி யன், துணை தாசில்தார் வெங்கடேசன், உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story