ராட்சச பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்!

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ராட்சச பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ராட்சச பலூனை பறக்கவிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நரிக்குறவர் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிஅனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஒரே கட்டமாக தமிழ்நாட்டிலும் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் பல்வேறு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது என்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் 100% வாக்களிக்க வேண்டும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் புதிய பேருந்து நிலையத்தில் ராட்சச பலூனை பறக்கவிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர் ஏற்படுத்தினார் அதேபோல் நரிக்குறவர் ஒருவரிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்களித்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவருடைய குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெசி ரம்யா இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story