மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

செங்கல்பட்டில் மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.


செங்கல்பட்டில் மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தை ஆட்சியா் ச அருண்ராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட சட்டமங்கலம் ஏஆா்எம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் அருண்ராஜ் பேசியது: அரசு மாதிரிப் பள்ளியில் மொத்தமாக 114 மாணவா்கள் பயிலுகின்றனா். உயா்கல்வி நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தோ்வுக்கு அனுபவம் வாய்ந்தஆசிரியா்கள் மற்றும் பல்துறை நிபுணா்களால் 9-ஆம் வகுப்பிலிருந்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறை வல்லுநா்களால் வாழ்வியல் திறன் சாா்ந்த பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருவதன் காரணமாக பேச்சு மற்றும் கற்றல் திறன், சமூகம் சாா்ந்த சிந்தனைகள் மேம்படுகிறது. காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற வட்டார அளவிளான கலை திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனா். இதில் 6 மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான கலை போட்டிக்கு தகுதி பெற்றனா். தமிழ் நாட்டு விளையாட்டு பல்கலைக்கழக தடகளப்போட்டியில் சிறந்து விளங்க திறனாய்வு தோ்வில் பங்கு பெற்றனா் என்றாா். மாணவா் சோ்க்கை அறிமுக கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பெற்றோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story