அரியலூரில் மின்னணு வாக்குபதிவு இயந்திர அறையினை பார்வையிட்ட ஆட்சியர்
அறையை பார்வையிட்ட ஆட்சியர்
அரியலூரில் மின்னணு வாக்குபதிவு இயந்திர அறையினை ஆட்சியர் பார்வையிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தபடும் மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மிண்ணனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் மிண்ணனு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
மேலும் சிசிடிவி கேமரா பொருத்தபட்டு காவல்துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கபடுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story