மார்த்தாண்டத்தில் சாலைகள் பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

மார்த்தாண்டத்தில் சாலைகள் பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
மார்த்தாண்டம் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மார்த்தாண்டத்தில் சாலைகள் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளிலுள்ள பழுதடைந்த சாலையினை சீரமைக்குமாறு பொதுமக்கள், வியாபார பெருங்குடியினர், வியாபார சங்கத்தினர், பணிக்கு செல்லும் அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மார்த்தாண்டம் பகுதியில் பழுதடைந்த சாலைகள் சீர் படுத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுதிட்டம் 2023-24-ன்கீழ், ரூ.4.96 கோடி மதிப்பில் குழித்துறை ஆலஞ்சோலை ஆறுகாணி வரை சுமார் 6 கி.மீ நீளத்திற்கு சாலை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்ற ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் திரு.பாஸ்கரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story