ஆசிரியருக்கு டோஸ் விட்ட கலெக்டர்!

ஆசிரியருக்கு டோஸ் விட்ட கலெக்டர்!

  திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆசிரியர்களை சாடினார். 

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆசிரியர்களை சாடினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு டோஸ் விட்ட கலெக்டர்! அரசு பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொள்வேன் தவறு ஏதேனும் நடந்திருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என கலெக்டர் எச்சரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது தமிழக அரசின் உத்தரவின் படி 4.15 மணி முதல் 5.15 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற வேண்டும் என நடைமுறை உள்ளது இந்த நிலையில் அதனை சரியாக திருப்பத்துர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுகிறார்களா? திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த சிறப்பு வகுப்பில் 38 மாணவர்கள் வருகை புரிய வேண்டும் ஆனால் 30 மாணவர்கள் மட்டுமே வருகை புரிந்திருந்ததால் ஆசிரியர்களுக்கு ஏன் பள்ளி மாணவர்கள் வரவில்லை என கேட்டு டோஸ் விட்டார்.

மேலும் இதுபோல் திரும்பவும் நடைபெற கூடாது. மேலும் விடுப்பு எடுத்த மாணவர்களை ஏன் தொலைபேசியில் நீங்கள் அழைக்கவில்லை. மாணவர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களை பள்ளிக்கு வர வழிவகை எடுக்க நடவடிக்கை எடுப்பேன். என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் இது போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொள்வேன் அப்போது தவறு ஏதேனும் நடந்திருக்கும் பட்சத்தில் பாராபச்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story