எங்களுக்கு பாதுகாப்பு வேணும்: காதலனுடன் காவலர் மகள் தஞ்சம்
தஞ்சம் அடைந்த காதலர்கள்
அருமனை அருகே உள்ள ஆறுகாணி ஒரு நூறாம்வயல் பகுதியை சேர்ந்தவர் பரமா னந்தன். இவருடைய மகன் சஜீத். இவர் அருமனையில் நிதி நிறுவனத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார், போலீஸ்காரர். இவரது மகள் அபிராமி.
பட்டதாரி.இதற்கிடையே சஜித்தும், அபிராமியும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து 2 பேரும் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து அனில்குமார் ஆறுகாணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் சஜித் மற்றும் அபிராமி அருமனையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது சஜித் கூறியதாவது, நாங்கள் இருவரும் மேஜர். கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எங்கள் காதலுக்கு அபிராமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அபிராமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்தனர். அவரது செல்போனையும் பறித்து வைத்துகொண்டதால் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் நாங்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி கோவி லில் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்கள் இருவரையும்,
சேர்த்து வைத்து பாதுகாப்பு தர வேண்டும். என்று மனு கொடுத்தார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் இரு வீட்டினரையும் அழைத்து பேச்சுவார்தை நடத்தினார். ஆனால் அபிராமியின் காதலை அவரது பெற் றோர் ஏற்க மறுத்தனர்.
தொடர்ந்து மகளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பெற்று கொண்டு அவர்கள் சென்று விட்டனர். பின்னர் காதலர்கள் இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர்.