காட்பாடியில் மகா மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்

காட்பாடியில் மகா மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

காட்பாடியில் கிராம தேவதை சுந்தரி அம்மன் கோயிலில் மகா மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்பன் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கிராம தேவதை சுந்தரி அம்மன் கோயிலில் ஏழு ஊர்களுக்கான கிராம தேவதையாக உள்ளது.

இந்த கோயில், சுந்தரி அம்மன் கோயில் , அறக்கட்டளை இன் சார்பில் கோயிலில் கருங்கல் மண்டபம் 33 அடியில் அமைத்து கர்ப்ப கிரகமும் , அர்த்த மண்டபமும் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் , அடுத்த கட்டமாக சுந்தரி அம்மன் கோயில் விழா குழுவினர் சார்பில் 60 அடி நீளம் 70 லட்சம் மதிப்பில் நிதி திரட்டி மகா மண்டபம் அமைப்பதற்காக சுந்தரி அம்மன் கோயில் , விழா குழுவினர் சார்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் விழா குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story