உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த சமையல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
காவல்துறை விசாரணை
தக்கலை அருகே உடல் நல குறைவால் அவதிப்பட்ட சமையல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
விளவங்கோடு தக்கலை அருகே திருவிதாங்கோடு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் கலீல்ரஹ்மான். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமண மாகி ஹயர் நிஷா என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கலீல் ரஹ்மான் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தினமும் அதிகளவில் மது அருந்த தொடங்கினார். இருப்பினும் கலீல் ரஹ்மான் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் இருதினங் களுக்கு முன் கலீல்ரஹ்மானின் மனைவி தனது மகளுடன் கொல்லங்கோட்டில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கலீல் ரஹ்மான் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் காலை சமையல் தொழிலுக்கு அழைப்பதற்காக சிலர் கலீல் ரஹ்மானின் வீட்டுக்கு வந்தனர். அப்போது கலீல் ரஹ் மான் வாயில் நுரைதள்ளிய நிலையில் சுயநினை வின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே கலீல் ரஹ்மான் மீட்கப்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது கலீல் ரஹ்மான் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார். அவர் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. கலீல் ரஹ்மான் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ஹயர் நிஷா அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story