மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு!

மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி கனமழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தூத்துக்குடியில் உள்ள சுமார் 2 லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அனைத்து பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தனர் மூன்று நாட்கள் உணவுகள் வழங்கப்பட்டது.

இன்று காலை உணவுகள் வழங்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி குமரன் நகர், லூர்தம்மாள் புரம், அன்னை வேளாங்கண்ணி நகர், பகுதியில் உள்ள மக்கள் சுமார் 500 பேர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் அமைச்சர், எம்பி., மேயர் வந்தால் தான் இடத்தை விட்டு செல்வோம் 4 தினகளாக எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. உணவு கூட கொடுக்கவில்லை எங்கள் பகுதியில் உள்ளவர்கள் தான் உணவுகள் கொடுத்தார்கள். தற்போது நாங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து நிற்கிறோம். இதனால் எங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவரிடம் சமாதானம் செய்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story