இரண்டு மாதம் கழித்து நடந்த கவுன்சிலர் கூட்டம் - டீவடை சாப்பிட்டு கலைந்த கவுன்சிலர்கள்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர்மன்ற ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இராஜபாளையம் நகராட்சி 42 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இராஜபாளையம் பகுதியில் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் பள்ளமேடுகளாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் கொண்டு வந்தார் .
ஒரு தீர்மானம் வாசித்து முடித்த உடனே 1 முதல் 30 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது என கூறி நகர தலைவர் எழுந்து சென்றதால் வடை டீ சாப்பிட்டு முடிப்பதற்க்குள் கூட்டம் முடிந்ததால் பொது மக்கள் பிரச்சினைகளை பேச வாய்ப்பில்லாமல் கவுன்சிலர்கள் எழுந்து சென்றனர் திமுகவைச் சேர்ந்த 37 கவுன்சிலர் இருப்பதால் எதிர்த்துப் பேச முடியாமல் வெளியே வந்து மக்களாள் தேர்ந்து எடுத்த கவுன்சிலர்கள் பேச முடியாத அளவுக்கு கூட்டம் அமைந்துவிட்டது.
மாதந்தோறும் நடைபெற வேண்டிய கூட்டம் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நடந்தாலும் அந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி கேட்பதற்கு பதில் சொல்ல ஆணையாளரும், தலைவரும் தயாராக இல்லாத நிலையில் இது போன்று நடந்தால் மக்கள் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என கவுன்சிலர்கள் வேதனையுடன் களைந்து சென்றனர்