பேரூராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்கள்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சி மன்ற தலை வராக கவிதா இருக்கிறார். இந்நிலையில், பேரூராட்சிக்கு உட் பட்ட 18 வார்டுகளுக் கும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக, பொது நிதியில் வார்டு ஒன்றுக்கு ரூ30 லட்சம் வீதம் ரூ.5கோடியே 86லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
பேரூராட்சி மன்ற தலைவர் கவிதாவும், 4வது வார்டு உறுப்பின ரும், பேரூராட்சி மன்ற தலைவர் சுவிதாவின் கணவருமான ராஜா அடிப்படை வசதிகளுக்கு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை, சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு ஒதுக்காமல் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தம்மம்பட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து,கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை கண்டித்து, மன்ற உறுப்பினர்கள்11 பேர். தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.