காஞ்சியில் ஓட்டு எண்ணும் மையம் தயார்

காஞ்சியில் ஓட்டு எண்ணும் மையம் தயார்

ஸ்ட்ராங்க் ரூம் அமைக்கும் பணி தீவிரம் 

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஸ்ட்ராங்க் ரூம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்படுகிறது. கேமரா பொருத்துவது, சாரம் கட்டுவது, உயர்ரக பாதுகாப்பு அறை அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், காஞ்சி புரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்படுகிறது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு எண்ணும் மையம், அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரியிலேயே அமைக்கப்படுகிறது. இம்முறை ஓட்டு எண்ணும் மையத்தில் சாரம் கட்டுவது, அறைகளை தயார் செய்வது என அனைத்து வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்ணா பல்கலை கல்லுாரி, தரை தளத்துடன் கூடிய இரு தளங்களுடன் இருப்பதால், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என இரு தளங்களிலும் ஒட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், இரண்டாம் தளத்தில், செய்யூர், திருப்போரூர், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் செய்யப்படுகிறது. தேர்தலன்று ஓட்டுப்பதிவு முடிந்த பின், அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மையத்திற்கு கொண்டு வரப்படும். அதற்கான உயர்ரக பாதுகாப்பு அறை - 'ஸ்ட்ராங்க் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story