பெலிக்ஸ் ஜெரால்டிற்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்
பெலிக்ஸ் ஜெரால்டிற்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் தனியார் youtube சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை முடித்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் இரண்டாவது நபராக பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இன்லையில் நேற்று திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு மனு ஏற்கப்பட்டது.பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபட்டார்.மேலும் வருகின்ற 31ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.மேலும் வருகின்ற 27 ஆம் தேதி சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.