கள்ளகாதலுக்காக குழந்தையை கொன்ற ஆசிரியை-ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

கள்ளகாதலுக்காக குழந்தையை கொன்ற ஆசிரியை-ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற ஆசிரியர்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை அடித்து கொலை செய்த ஆசிரியர் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில், கடந்த 2019 மே மாதம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக லக்‌ஷிகா ஸ்ரீ என்ற தனது முதல் கணவனுக்கு பிறந்த, 5 வயது மகளை அடித்து கொலை செய்த வழக்கில் தனியார் பள்ளி கணினி ஆசிரியை நித்ய கமலா மற்றும் அவரது கள்ளக்காதலனும், தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியருமான முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டதில் குழந்தையை அடித்து கொலை செய்த நித்திய கமலா மற்றும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி செல்வ முத்துமாரி தீர்ப்பளித்துள்ளார்.

Tags

Next Story