மின்வாரிய அலுவலகத்தில் மனு வழங்கிய சிபிஎம் கட்சியினர்
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என, பள்ளிபாளையம் சிபிஎம் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பாளையம், காவிரி ஆர் எஸ், அன்னை சத்யா நகர், வஉசி நகர், ஆயக்காட்டூர் உள்ளிட்ட கட்சிக் கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி செயற் பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில், அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.
அதில் மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திட்டத்தை கைவிட வேண்டும்! மத்திய அரசின் மின்சார திருத்தம் 2022 ஐ கேரளா அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறிவிட்டது.. அதேபோல தமிழக அரசும் நிராகரிக்க வேண்டும்! இந்த கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் அனுப்பி மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு வழங்கும் நிகழ்வும் பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.மோகன், எஸ்.முத்துக்குமார், மற்றும் கட்சி கிளை செயலாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்...