திருவாரூரில் குற்ற கலந்தாய்வு கூட்டம் எஸ்பி தலைமையில் நடைபெற்றது

X
திருவாரூரில் குற்ற கலந்தாய்வு கூட்டம் எஸ்பி தலைமையில் நடைபெற்றது
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ள வழக்குகளில் உடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிகைகளை விரைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எஸ்பி அறிவுரைகள் வழங்கினார். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை உடனுக்குடன் ஆஜர்ப்படுத்தியும், நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை உடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
Next Story
