இறந்தவரின் சடலத்தை சாலையின் நடுவே புதைத்ததால் பரபரப்பு

இறந்தவரின் சடலத்தை சாலையின் நடுவே புதைத்ததால் பரபரப்பு

சாலையின் நடுவே அடக்கம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை சேர்ந்த கீழகரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து மயானத்துக்கு செல்ல 823 மீட்டர் இரண்டு கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாகவும் இருந்து வருகிறது. இந்த சாலை தார் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 600 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு மீதம் உள்ள பணியும் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே கீழகரம் சௌந்தர்ராஜன் என்பவர் இறந்து விட்டார் அவரின் உடலை மயானத்துக்கு செல்லும் சாலையில் குழி தோண்டி புதைத்து விட்டனர். மயானத்திற்கான இடத்தை ஒட்டி சாலை செல்வதால் இட வசதி இல்லாததால் அந்த சாலையில் சடலத்தை புதைத்ததோம் என கூறியுள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டி இறந்தவரின் சடலத்தை புதைத்த சம்பவம் ஆச்சாள்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன் விசாரனை மேற்கொண்டார்.

Tags

Next Story