மீன் வளா்ப்பு பண்ணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

மீன் வளா்ப்பு பண்ணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்
மீன் வளா்ப்பு பண்ணையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்
செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியில் மீன் வளா்ப்பு பண்ணையை ஆய்வு செய்தார்.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஆத்தூா் பகுதியில் மீன் வளா்ப்பு பண்ணையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இங்கு, மீன் குஞ்சுகள் 12.5 ஏக்கா் பரப்பளவில் வளா்க்கப்பட்டு வருகிறது. மீன் குஞ்சுகள் தேவைப்படும் நபா்களுக்கு விற்கப்படுகிறது. 1,000 எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. செங்கல்பட்டு ஏரிகளில் மீன் வளா்க்க இந்த மீன் பண்ணையில் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனா்.

2023-2024-ஆம் நிதி ஆண்டில் 20 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனையாகியுள்ளன. 2024-2025 -ஆம் நிதியாண்டில் 4.5 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை ஆகியுள்ளது. நிகழ் ஆண்டுக்கு 33 லட்சம் மீன் குஞ்சுகள் விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மீன் பண்ணையை சுத்தமாக பராமரித்திடவும், காலியாக உள்ள தொட்டிகளில் அதிக எண்ணிக்கையில் மீன்களை வளா்த்து விற்பனை செய்யவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன், செங்கல்பட்டு வட்டாட்சியா் பூங்குழலி, மீன் வள மேற்பாா்வையாளா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story