பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த மறை மாவட்ட ஆயர்

பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்
குமரி மாவட்டம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் புனித அலோசியஸ் இசைப்பள்ளி ஆகியவற்றை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் ஒளியேற்றி அர்ச்சித்து திறந்துவைத்தார். பங்கு அருட்பணியாளர் விக்டர் தலைமை வகித்தார். தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. முட்டம் கேஎம்எம்சி அருட்பணியாளர்கள், நுள்ளிவிளை கார்மல் அன்னை ஆலய பங்கு அருட்பணியாளர் மரியசூசை, முக்கலம்பாடு புனித வியாகுல அன்னை ஆலய பங்கு அருட்பணியாளர் ஆன்ட்றூஸ், காரங்காடு பங்கு அருட்பணியாளர் விக்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருப்பலி முடிவில் காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் மறைக்கல்வி மன்ற 275-வது ஆண்டுவிழா மலரை ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் வெளியிட மலர் குழுவினர் பெற்றுக் கொண்டனர். புனித ஞானப்பிறகாசியார் பாடல்களை ஆயர் வெளியிட பங்கு அருட்பணியாளர் விக்டர் பெற்றுக் கொண்டார். முடிவில் கண்தானம் மற்றும் உடல் தானம் செய்த 33 பேருக்கு அவர்களுடைய உறவினர்களிடம் நினைவு பரிசை ஆயர் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்குப்பேரவை நிர்வாகிகள் ஜெய்சன், மேரி ரெக்செலின், சேவியர் ஜார்ஜ், ஜோஸ்பின் ஷீபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெலிக்ஸ் ராஜன், கிலிங்ஸ்டன் பங்குப் பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பங்கு மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
