நாமக்கல்லில் சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

நாமக்கல்லில் சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
குழந்தைகள் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும். விரல் நகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குடிநீரை சுத்தமாக காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்.

நாமக்கல் அருகே உள்ள, சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம் மற்றும் வயிற்றுப் போக்கு நிறுத்த முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இழப்புகளை முற்றிலுமாக தடுப்பதற்காக ஆண்டுதோறும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முழுவதும் இம்முகாம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1,13,510 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மாத்திரைகள், 2 ஓஆர்எஸ் பொட்டலங்கள் மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பொதுவாக வயிற்றுப்போக்கு மற்றும் சளி நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் உயிர்காக்கும் மருந்துகளான ஓஆர்எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்க இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும், குழந்தைகள் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும். விரல் நகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குடிநீரை சுத்தமாக காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story