ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையாளராக வேண்டுமா...?

ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையாளராக வேண்டுமா...?

ஆவின் ஐஸ்கிரீம்

ஆவின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனையாளர்களுக்கான விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஐஸ்கிரீம் வகைகள் பல்வேறு சுவைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்களிடமிருந்து ஐஸ்கிரீம் மொத்த விற்பனையாளர்களுக்கு விண்ணப்பங்கள் 10.11.2023 வரை வரவேற்கப்படுகின்றன. அணுக வேண்டிய முகவரி: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., நாமக்கல், 1 / 1167. பரமத்தி ரோடு. E. B. காலனி . நாமக்கல் PIN 637 001-ல் அமைய பெற்றுள்ள ஒன்றியத்தை அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு திரு.P.திவாகர் மேலாளர் (விற்பனை), கைப்பேசி கண்.96590 89008 மற்றும் திரு.P.தனபால், பால் விற்பனை அலுவலர் கைப்பேசி எண்கள். 94885 75759, 86108 83002 மூலம் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.


Tags

Next Story