திருப்பூரில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருப்பூரில் போலியோ சொட்டு மருந்து முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒலிக்கும் வகையில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம் என மொத்தம் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 259 மையங்கள் மூலமாகவும் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மூலமாகவும் மொத்தம் 1154 மையங்களில் இன்று மாலை 5 மணி வரை ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை கூடிய சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4ஆவது மண்டலம் 52-வது வார்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல பத்மநாபன், உமாமகேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கினார்கள் அதற்கு முன்னதாக குழந்தைகள் அனைவருக்கும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். நிகழ்வில் மண்டல உதவி ஆணையாளர் வினோத் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story