விருதுநகர் : வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், விடத்தாக்குளம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.40 இலட்சம் மதிப்பில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.14 இலட்சம் மதிப்பில் அம்மன் கோவில் ஊரணி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும், வி.புதூர் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
பின்னர், பள்ளிமடம் ஊராட்சி மைலி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளி கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.14 இலட்சம் மதிப்பில் மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளியில் உள்ள சமையலறை கூடத்திற்கு சென்று மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளிமடம் கிராமத்தில் ரூ.11.58 இலட்சம் மதிப்பில் சிவன் கோயில் ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.