பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23 கோடியில் கட்டவுள்ள புதிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23 கோடியில் கட்டவுள்ள புதிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23 கோடியில் கட்டவுள்ள திட்டத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்கட்டடம் தரை தளம் 8853.00 சதுர அடி பரப்பளவில் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி, வெளிப்புற நோயாளிகள் அறை (விபத்து பகுதி), சிறிய அறுவை சிகிச்சை பகுதி, காவல் துறை விசாரணை அறை, சி.டி.ஸ்கேன் அறையுடனும், முதல் தளம் 8466.08 சதுர அடியில் அறுவை சிகிச்சை அறை, கட்டு கட்டும் அறை, நுண் கதிர் அறை, மருந்து வைப்பறை, ஊசிப்போடும் அறையுடனும், இரண்டாம் தளம் 8466.08 சதுர அடியில் அறுவை சிகிச்சை பிரிவு செவிலியர் பகுதி–2 நோயாளிகளுடன் இருப்பவர் காத்திருப்பு அறை, 9 படுக்கை வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவுடனும், மூன்றாம் தளம் 8466.08 சதுர அடியில் 8 படுக்கைகளுடன் அறுவை சிகிச்சைக்கு பின் ஆண்கள் தங்கும் பகுதி, 10 படுக்கைகளுடன் அறுவை சிகிச்சைக்கு பின் பெண்கள் தங்கும் பகுதி, செவிலியர் பகுதி -4, தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, 10 படுக்கைகளுடன் ஆண்கள் வார்டு, நான்காம் தளம் 8466.08 சதுர அடியில் 18 படுக்கைகளுடன் பெண்கள் வார்டு, 8 படுக்கையுடன் டயாலிசிஸ் வார்டு, ஆய்வகம், இரத்த சேமிப்பு, சேகரிப்பு பகுதிகளுடன் கட்டப்பட உள்ளது. அனைத்து தளங்களிலும் சாய்வு தளம், படிக்கட்டுகள் மற்றும் கழிப்பறைகள் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

Tags

Next Story