மாமல்லபுரம் : புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மாமல்லபுரத்தில் சுற்றுலாபயணிகளிடம் அடாவடியாக நுழைவுகட்டணம் வசூலித்தால் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடிசெலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.
Tags
Next Story