வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!
ச.உமா
மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல்-கரூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் சோதனை சாவடியில் இன்று சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களையும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த சோதனை சாவடி வழியாக வருகை தரும் இரண்டு சக்கரம், நான்கு சக்கரம், மூன்று சக்கரம், கனரக வாகனங்கள்,பேருந்து என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய சோதனை சாவடியில் இருந்த காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள் (FST), நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் (SST), வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் (VVT), வீடியோ பார்வைக் குழுக்கள் (VST), கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்ட எல்லைகளான எம்.மேட்டுப்பட்டி, பவித்திரம் புதூர், மல்லூர், பரமத்தி-வேலூர், வாங்கல் சாலை, திம்மநாய்க்கன்பட்டி, கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலம், குமாரபாளையம் காவிரி ஆற்று பாலம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சோதனைச் சாவடிகளில் தலா 3 காவலர்கள், 3 துணை இராணுவ படையினர் வீதம் மொத்தம் 60 நபர்கள் பணி அமர்த்தப்பட்டு தீவிர வாகன சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்கள். ”தேர்தல் பருவம் – தேசத்தின் பெருமிதம்” வெளியீடு