சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது
வேட்பாளர்கள் சின்னங்கள் ஓதுக்கீடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதிக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஓதுக்கீடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., நேற்று மாலை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) அ. அசோக்குமார், வெங்கடேசன்,தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story