சாலை விபத்தில் 4 பேர் பலியான இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த இடத்திற்கு நேரில் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த இடத்திற்கு நேரில் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உற்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின் , ஹரி , ஆகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் (கே டி எம் பைக்) செல்லும் போது தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது (பேஷன் ப்ரோ) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் கீழே விழுந்து கிடந்த மூன்று இளைஞர்கள் மீது அவ்வழியே செங்கற்கள் ஏற்றி சென்ற டிராக்டர் ஏறியதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஸ்ரீதர் என்பவர் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று இவ்விபத்து நடந்த இடமான தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா,மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story