தேர்தல் விழிப்புணர்வு குறித்து குறுந்தகட்டை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

தேர்தல் விழிப்புணர்வு குறித்து குறுந்தகட்டை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

குறுந்தகடு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் 

தேர்தல் விழிப்புணர்வு குறித்து குறுந்தகட்டை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

இதனை கோவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.மாவட்ட ஆட்சியர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று கொண்டனர்.இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எங்கெங்கெல்லாம் 60% க்கும் கீழ் வாக்குப்பதிவானதோ அங்கு அழைப்புதல் தருவது உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஆவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு சாமியானா,வீல் சேர் போன்ற குறிப்பிட்ட வசதிகள் இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story