திருவாரூரில் நடைபயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் நடைபயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
X

நடைபயிற்சி திட்டம்

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்கிற 8 கிலோமீட்டர் சுகாதார நடைபாதை திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் இத்திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடை பயிற்சி பயணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், எஸ் பி ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story