இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

 தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.01.2024), இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் சேர்த்திடவும், தொகுதி மாற்றிடவும், நீக்கம் செய்திடவும், மற்றும் திருத்தம் அல்லது நகல் கமுறை திருத்தம், 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் அடையாள அட்டை கேட்டு மொத்தம் 71,792 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு 69,885 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண் வாக்காளர்களும் 7,39,720 பெண் வாக்காளர்களும் 215 மூன்றாம் பாலினத்தோர் ஆகிய அனைவரும் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 102845, பெண்கள் 106607 மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,09,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2048.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 136716, பெண்கள் 143338 மூன்றாம் பாலினம் 71 என மொத்தம் 2,80,125 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1881பேர். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 116665, பெண்கள் 123189 மூன்றாம் பாலினம் 30 என மொத்தம் 2,39,884 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2222. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 109476, பெண்கள் 112914, மூன்றாம் பாலினம் 3 என மொத்தம் 2,22,393 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1790. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 119032 பெண்கள் 124078 மூன்றாம் பாலினம் 58 என மொத்தம் 2,43,168 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2384. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 123510, பெண்கள் 129594, மூன்றாம் பாலினம் 33 என மொத்தம் 2,53,137 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1658. இதில் 18-19 வயதுடைய புதியதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 11,983. இவர்களுக்கான வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான 25.01.2024 அன்று முதல் பதிவஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் நடைபெறுவதால், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 01.08.2022 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் நமது மாவட்டத்தில் 72 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணைவாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். மேலும் நகரப்பகுதிகளில் இப்பணி மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், கைபேசியில் Voter Helpline APP (VHA) என்ற செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்திடவும் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950ல் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) செந்தில்வேல்முருகன் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story