வாக்காளர்களுக்கு கடிதம் எழுதிய மாவட்ட ஆட்சியர்
கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இன்று தனித்தனியாக கடிதம் எழுதி, சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு தொடர்புடைய தபால் துறை பணியாளர்களின் மூலம் அனுப்பினார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறைந்தளவு வாக்குப்பதிவான வாக்கு சாவடி மையங்களை சேர்ந்த வாக்காளர்களுக்கு, தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ல் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய முறையாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இன்று (26.03.2024) தனித்தனியாக கடிதம் எழுதி, சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு தொடர்புடைய தபால் துறை பணியாளர்களின் மூலம் அனுப்பினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்கு "எனது அன்பார்ந்த தருமபுரி வாக்காளரே. உங்கள் மாவட்ட ஆட்சியர் கே. சாந்தி., ஆகிய நான் உங்களுக்கு எழுதும் மடல்.உங்கள் அனைவருக்கும் தெரியும் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஏப்ரல் 19 (வெள்ளிக் கிழமை) அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ளது. வாக்களிப்பது நம் அனைவருடைய உரிமையும், கடமையும் ஆகும். நாம் தவறாமல் வாக்களிப்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது நல்வாழ்விற்கும் வழிவகுக்கும். ஆகவே தருமபுரி வாக்களர்களாகிய நீங்கள் தேர்தல் நாள்: 19.04.2024 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் உங்களுடைய வாக்குசாவடிக்கு சென்று தவறாமல் வாக்களித்து நம்முடைய ஜனநாயக கடமையை ஆற்ற உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்ற கடிதம் தனித்தனியாக எழுதி, சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்தார். கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி எண். 84, (மாரண்டஹள்ளி நகரம்). பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வாக்குசாவடி எண். 2. (வட்டுவனஅள்ளி) மற்றும் வாக்கு சாவடி எண். 94 (பாப்பாரப்பட்டி நகரம்), வாக்கு சாவடி எண். 146 (பென்னாகரம் நகரம்) அரூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எச். கோபிநாதம்பட்டி அரூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் விடுபடாமல் கடிதத்தை சென்று சேர்க்க அறிவுறுத்தியதோடு, வாக்காளர்களிடம் மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஆகவே "மாவட்ட ஆட்சியரின் கடிதம் வழியாக கூறப்பட்டுள்ள கோரிக்கையினை ஏற்று நீங்கள் நலறாமல் வாக்களிக்க வேண்டும்" என ஒவ்வொரு தபால்துறை ஊழியர்களிடமும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்படத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story