விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்த போதை விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்த போதை விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கோவை:போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பற்றிநாத் மதுக்கரையில் பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கல்லூரிக்கு சென்றவர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனையடுத்து கற்பகம் கல்லூரி முதல் மலுமிச்சம்பட்டி வரை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினரால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

Tags

Next Story