ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர் - பேரூராட்சி பணியாளர்கள் தர்ணா

ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர் - பேரூராட்சி பணியாளர்கள் தர்ணா

தர்ணா 

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பெண் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து பேரூராட்சி பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சியாக இருக்கின்றது இந்தப் பேரூராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மூன்றாவது வார்டு உறுப்பினராக இருக்கின்ற திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாகவும் பெண் பணியாளர்களை தரக்குறைவாக பேசி வருவதாக குற்றம்சாட்டி அவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டன ர்.பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து அலுவலக மற்றும் துப்புரவு பணியாளர்களும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு திமுக வார்டு கவுன்சிலர் செல்வராஜை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் மீது புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்

Tags

Next Story