சிறுவன் மூக்கில் சாக்பீஸ் அகற்றிய மருத்துவர்!

அன்னவாசல் அருகே சிறுவன் மூக்கில் சாக்பீஸ் அகற்றிய மருத்துவர்.
புதுகோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் தேவேஷ் (வயது-4). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜீ படித்து வருகிறான். இந்தநிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக சாக்பீஸ் மூக்கினுள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் தேவேஷ் துடித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அன்னவாசல் மருத்துவமனையில் மருத்துவர் மணியன் சாக்பீசை அகற்றினார்.

Tags

Next Story