வடிகால் அமைப்பு போதிய அளவில் இல்லை குட்டை போல் மழைநீர்

வடிகால் அமைப்பு போதிய அளவில் இல்லை குட்டை போல் மழைநீர்

குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்

வடிகால் அமைப்பு போதிய அளவில் இல்லை குட்டை போல் மழைநீர் தேங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. விளக்கடி கோவில் தெரு, மேட்டுத்தெரு, செவிலிமேடு, ஓரிக்கை போன்ற இடங்களில் இந்தாண்டு மழைநீர் வடிகால், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டன. இ

ரப்பினும், பல இடங்களில் மழைநீர் வடிகால் இல்லாததால், நகரின் பல்வேறு இடங்களில் குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி முழுதும் டெங்கு காய்ச்சல் பரவும் சூழலில், மழைநீர் வெளியேற முடியாமலும், கொசு உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே, உத்திரமேரூர் செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறை கட்டிய வடிகால் பலனின்றி, மழைநீர் குளம் போல் தேங்குகிறது. சிறிய மழைக்கே ஒரு அடி ஆழம் வரை தேங்குவது வாடிக்கையாக உள்ளது."

Tags

Next Story